இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் மலிங்கா தலைமையிலான 16 வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக் குழு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் மேத்யூஸ் இறுதியாக விளையாடியிருந்தார்.
இலங்கை அணி விவரம்:மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அபிஷ்கா ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், துசன் ஷனகா, குசல் பெரேரா, நிராஷன் திக்வேலா, தனஞ்ஜெய டி சில்வா, இசுரு உதானா, பவனகா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஹசரங்கா, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா, குசல் மெண்டிஸ், லக்ஷன் சண்டகன்.