தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனாவுக்கு ரூ. 2.5 கோடி நிதியுதவி - இலங்கை கிரிக்கெட் வாரியம்! - கரோனாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை கிரிக்கெட் வாரியம்

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ. 2.5 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளது.

Sri Lanka Cricket grants LKR 25 million to combat COVID-19 pandemic
Sri Lanka Cricket grants LKR 25 million to combat COVID-19 pandemic

By

Published : Mar 23, 2020, 5:35 PM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா (கோவிட் -19 ) வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் மூன்று லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கோவிட் -19 தொற்றால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அடுத்த அறிவிப்பு வரும்வரை அனைத்து விதமான சர்வேதச, உள்ளூர் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவிட் -19 வைரசை எதிர்த்து போராடுவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ரூ. 2.5 கோடி நிதியுதவியை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ. 2.5 கோடியை அளிக்க முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்த கோவிட் -19 வைரஸை எதிர்த்து போராட மக்கள் சுகாதாரத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களின் வாயிலாக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் இதுவரை கோவிட் -19 வைரஸால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோலியுடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்த கிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details