பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் சாதனைப் படைத்திருந்தால், அவர்களது சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் இருக்கும் கேலரியின் ஒரு பகுதிக்கு அவர்களது பெயரை சூட்டி கவுரவிப்பார்கள். இந்தியாவில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது அந்த வரிசையில் தோனியும் இணைந்துள்ளார்.
இவர் ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று இந்திய அணியை தலைசிறந்த அணியாக மாற்றியவர். இதைத்தவிர இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன், ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என்ற பெயருக்கும் இவர் சொந்தக்காரர் ஆவார்.
என் சொந்த வீட்டில் நானே திறந்த வைக்க என்ன உள்ளது...தோனியின் பெருந்தன்மை! - இந்திய
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தன் பெயரில் சூட்டப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க இந்திய வீரர் தோனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது.
தோனியின் சொந்த ஊரில் போட்டி நடைபெறவுள்ளதால், அவரை கவுரவிக்கும் வகையில் அந்த மைதானத்தின் வடக்கு பகுதியில் உள்ள கேலரிக்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது இதையடுத்து, இந்த பெவிலியனை தோனியே திறந்து வைக்க வேண்டுமென ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் கேட்டுக்கொண்டது.
ஆனால், என் சொந்த வீட்டில் நானே திறந்து வைக்க அப்படி என்ன இருக்கிறது என்று தோனி பணிவுடன் பெவிலியனை திறந்து வைப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாக, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் தேபஷிஸ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
37 வயதிலும் தன் சமயோசித புத்தியாலும், குறும்புத் தனத்தாலும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், அவரது இந்த முடிவும் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.