தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கு விளையாட்டு அமைச்சர் எச்சரிக்கை!

சிஎஸ்ஏ உறுப்பினர்களை இடைக்கால வாரியத்தை அங்கீகரிக்காவிட்டால், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை திரும்பபெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு அமைச்சர் நதி மதேத்வா எச்சரித்துள்ளார்.

sports-minister-nathi-mthethwa-threatens-to-de-recognise-cricket-south-africa
sports-minister-nathi-mthethwa-threatens-to-de-recognise-cricket-south-africa

By

Published : Nov 13, 2020, 10:49 PM IST

சிஎஸ்ஏவின் மெமோராண்டம் ஆஃப் இன்கார்பரேஷன் அடிப்படையில் தொழில்நுட்பங்களை மேற்கோள் காட்டி, இரண்டு வாரங்களுக்கு முன்பு மதேத்வாவால் நியமிக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால வாரியக் குழுவை அங்கீகரிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா உறுப்பினர்கள் கவுன்சில் வியாழக்கிழமை முடிவு செய்தது.

இதற்கு அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் மதேத்வா, '' இடைக்கால வாரியத்தை அங்கீகரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பது வருந்ததத்தக்கது என கருதுகிறேன். இந்த முடிவை உடனடியாக மீண்டும் பார்வையிடவும், இடைக்கால வாரியத்திற்கு தேவையான அங்கீகாரத்தை வழங்கவும், உங்களிடமும் உறுப்பினர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை செய்யாவிட்டால் சட்டத்தின் கீழ் எனது அதிகாரங்களைப் பயன்படுத்துவேன்'' என எச்சரித்துள்ளார்.

குளோபல் டி 20 லீக்கைத் தொடங்கத் தவறியதைத் தொடர்ந்து, வாரிய உறுப்பினர்களுடனான பிரச்னைக்கு பின்னர் 2017இல் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் ஹாரூன் லோர்கட் பதவி விலகினார். இவர் இடைக்கால குழுவில் இடம்பெற்றது தொடர்பாக, இப்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details