தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்கு பதிலடி தருவோம் - தென்னாப்பிரிக்க வீரர் சவால் - லுங்கி நிகிடி

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவோம் என தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : May 20, 2019, 10:45 AM IST

இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது.
இதனால், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி, அதற்கான தக்க பதிலடியை தருவோம். நிச்சயம் இப்போட்டி அனல் பறக்கும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில், தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே தென்னாப்பிரிக்காவைதான் எதிர்கொள்கிறது. தற்போது நிகிடியின் கருத்தால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி ஜூன் 5ஆம் தேதி சவுத்ஹாம்டன் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details