கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இப்பெருந்தொற்றால் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. இதில் இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் கலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், தன் வீட்டிலேயே பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ளும் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “எங்கள் திறமைகளை மேம்படுத்த, குறிப்பாக கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நாங்கள் வீட்டில் செய்யக்கூடிய சிறிய உடற்பயிற்சி” என குறிப்பிட்டு, சுவரில் பந்துகளை அடித்து விளையாடுவது போன்ற காணொலியையும் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க: மது போதையில் விபத்து: கிரிக்கெட் வீரர் கைது
!