தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘ஸ்டீவ் ஒரு கூண்டுக்குள் இருக்கும் சிங்கம்’ - டாம் மூடி - இந்தியா vs ஆஸ்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித் ஒரு கூண்டுக்குள் இருக்கும் சிங்கம், அவர் தனது வேட்டைக்காக காத்திருக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Smith is a caged lion ready to burst out: Moody
Smith is a caged lion ready to burst out: Moody

By

Published : Jan 6, 2021, 10:20 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறிவருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு கூண்டுக்குள் இருக்கும் சிங்கம், அவர் தனது வேட்டைக்காக காத்திருக்கிறார் என அந்த அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டாம் மூடி, "ஸ்மித்தை விமர்சிப்பதற்கு முன் அவர் படைத்துள்ள சாதனைகளை பார்க்கவும். ஆனால் அவர் இப்போது சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். அதற்கென அவர் மீண்டும் வரமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் கூண்டிக்குள் இருக்கும் சிங்கத்தைப் போன்றவர், தனது வேட்டைக்காக காத்திருக்கிறார். இந்தப் புதிய ஆண்டில் அவர் மீண்டும் தனது ஃபார்முக்குத் திரும்புவார்.

டாம் மூடி

மேலும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என வில்லியம்சன், விராட் கோலி, ஸ்மித்தின் பெயர்கள் எப்போதும் பேசப்பட்டுவருகின்றன. எனவே அந்த உரையாடலில் தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்த ஸ்மித் உறுதியுடன் இருப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Aus vs Ind: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக களமிறங்கும் பெண்!

ABOUT THE AUTHOR

...view details