தமிழ்நாடு

tamil nadu

சர்ஃப்ராஸ் ஒரு முட்டாள்தனமான கேப்டன்... தைரியமில்லாத கேப்டன்... பொறிந்து தள்ளும் அக்தர்!

பாகிஸ்தான் டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃப்ராஸ் அகமதுவை நீக்கியது சரிதான் என்ற முறையில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

By

Published : Oct 19, 2019, 10:07 AM IST

Published : Oct 19, 2019, 10:07 AM IST

ETV Bharat / sports

சர்ஃப்ராஸ் ஒரு முட்டாள்தனமான கேப்டன்... தைரியமில்லாத கேப்டன்... பொறிந்து தள்ளும் அக்தர்!

sarfaraz ahmed

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 போட்டிகளின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது செயல்பட்டு வந்தார். சமீபத்தில், பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியோடு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் தலைமையில், இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆனால் சர்ஃப்ராஸ் அகமது தலைமையில் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் மண்ணை கவ்வியது. ஒயிட் வாஷ் தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் அப்செட் செய்தது. மேலும் சர்ஃப்ராஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் பரவியது.

சர்ஃப்ராஸ் அகமது

சில மாதங்களாகவே பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக் அணித் தேர்வாளராகவும் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். இதிலிருந்தே பாகிஸ்தான் அணி பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

அந்த அதிரடி மாற்றம் நேற்றும் தொடர்ந்தது. டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட்டு வந்த சர்ஃப்ராஸை அப்பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இதற்கு பயிற்சியாளர் மிஸ்பா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்ஃப்ராஸ் அகமதுவின் கேப்டன்சியில் குறைபாடு உள்ளதாக புகார் தெரிவித்ததே காரணம் எனவும் வரப்போகிற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட், டி20 தொடர்களைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

மிஸ்பா-உல்-ஹக்

தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக அசார் அலியும் டி20 கேப்டனாக இளம் வீரர் பாபர் அசாமும் நியமிக்கப்பட்டனர். டி20 போட்டிகளில் 78 சதவிகிதம் வின்னிங் ஆவரேஜ் சர்ஃப்ராஸ் வைத்தும் ஏன் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குனீர்கள் என சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்த விவகாரம் குறித்து தன் பங்குக்கு அவருடைய கருத்தையும் தெரிவித்துள்ளார். யூட்யூப் சானலுக்கு பேட்டியளித்த அக்தர், “சர்ஃப்ராஸ் செய்த தவறால்தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. இன்னொன்றையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இனி அவரை பாகிஸ்தான் அணியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் சர்ஃப்ராஸ் அகமது

பாசிட்டிவ் மனநிலையையும் அதிரடியான (aggressive) பேட்டிங் முறையையும் கடந்த இரு வருடங்களாக சர்ஃப்ராஸ் கொண்டுள்ளார். இருப்பினும், முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை தாண்டி அவரால் தைரியமான முடிவை அவரால் எடுக்க முடியவில்லை. சர்ஃப்ராஸ் ஒரு தைரியமில்லாத கேப்டன் என நான் நினைக்கிறேன்” என்றார்.

முன்னதாக, நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கெதிரான லீக் போட்டியில் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல், சேஸிங்கை தேர்வு செய்ததால் தோல்வியைத் தழுவியது. இதனைக் கடுமையாக சாடிய அக்தர் முட்டாள்தனமான கேப்டன்ஷிப் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ஃப்ராஸ் அகமது

புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன்கள் குறித்து பேசிய அக்தர், “அசார் அலி டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது வரும் காலங்களில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஏனென்றால் பாகிஸ்தான் பலமான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப்போகிறது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட், டி20 தொடர்கள் பாகிஸ்தானுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details