தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜெயராஜ், பென்னிக்ஸிற்காக குரல் கொடுத்த ஷிகர் தவான்

சாத்தான்குளத்தில் காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார்.

shikhar-dhawan-raised-his-voice-for-jeyaraj-and-fenix
shikhar-dhawan-raised-his-voice-for-jeyaraj-and-fenix

By

Published : Jun 26, 2020, 3:52 PM IST

Updated : Jun 26, 2020, 6:44 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கின்போது கடையைத் திறந்ததற்காக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் வைக்கப்பட்டிருந்த இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல அரசியல் கட்சியினரும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாட்டின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டி நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் #JusticeForJeyarajAndFenix'' என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி குரல் கொடுத்த முதல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 26, 2020, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details