கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவிற்கான வேலைப்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மேலும், இப்பெருந்தொற்றால் ஐபிஎல் உள்பட அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள தங்களது நேரத்தை கழிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் அதிகமாக உலா வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளார்.