தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாட்டில் கேப் சேலஞ்ச்: தனது ஸ்டைலில் மிரட்டிய தவான்! - injured

யுவராஜ் சிங் விடுத்த பாட்டில் கேப் சேலஞ்சை தனது ஸ்டைலில் செய்து அசத்திய ஷிகர் தவானின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Shikhar Dhawan does 'Bottle Cap Challenge'

By

Published : Jul 19, 2019, 12:16 AM IST

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடலிரிந்து காயம் காரணமாக விலகினார் ஷிகர் தவான். அதன்பின் அவர் தன் குடும்பத்துடன் ஓய்வெடுத்துவரும் நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றிவுள்ளார்.

அந்த வீடியோவில் மிகப்பிரபலமான ’பாட்டில் கேப் சேலஞ்சை’ தனது பேட்டிங் திறமையினால் செய்து அசத்தியுள்ளார்.

புதிய சிந்தனையில் பாட்டில் கேப் சேலஞ்ச்

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் , யுவி பாஜி இதுதான் என்னுடைய பாட்டில் கேப் சேலஞ்ச், காயத்திலிருந்து மீண்ட பிறகு முதல் முதலாக என்னுடைய பேட்டை தொடுகிறேன். காயத்திலிருந்து மீண்டதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த சேலஞ்சை யுவராஜ்சிங் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் லாரா, சச்சின், கெயில், மற்றும் தவானுக்கு ஷேர் செய்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விததில் ஷிகர் தவான் தற்போது பாட்டில் கேப் சேலஞ்சை புதுவகையில் செய்து முடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details