தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'மகளிர் கிரிக்கெட்டுக்கு முதலீடு தேவை'- ஷிகா பாண்டே!

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, மகளிர் கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவும் விதிகளை மாற்றுவதைவிட, ரசிகர்களின் ஆதரவையும் உறுதிப்படுத்தும் வகையில் முதலீடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

By

Published : Jun 28, 2020, 4:08 PM IST

shikha-pandey-says-womens-cricket-needs-marketing-and-investment
shikha-pandey-says-womens-cricket-needs-marketing-and-investment

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஷிகா பாண்டே. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் கிரிக்கெட்டில் பார்வையாளர்களை ஈர்க்க அதிகப்படியான முதலீடுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஷிகாவின் ட்விட்டர் பதிவில், 'ஒரு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 100 மீ ஒட்டப்பந்தயத்தில் ஆண் கடக்கும் தூரத்தையே, பெண்களும் கடக்கின்றனர். மாறாக நேரத்தை கணக்கில் கொண்டு யாரும் 80மீ தூரத்தை கடப்பதில்லை. எனவே மைதானத்தின் அளவை குறைப்பதினால் மகளிர் கிரிக்கெட் முன்னேற்றமடையும் என்பது சங்கதேகத்திற்குரியது.

பந்தின் அளவைக் குறைப்பது நல்லது, ஆனால் இயன் ஸ்மித்தின் பரிந்துரைத்தபடி பந்தின் எடை அப்படியே இருந்தால் மட்டுமே அது சரியாக அமையும். ஏனெனில் இது பந்துவீச்சாளர்கள் பந்தை சிறப்பாகப் பிடிக்கவும், விக்கெட்டுகளை வீழ்த்தவும் உதவும். ஆனால் பந்தின் எடை குறைந்தால் அது பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

மேலும் மகளிர் கிரிக்கெட்டில் அதிகப்படியான முதலீடுகளை செய்யவதன் மூலமும் வளர்ச்சியை அடைய முடியும். அப்போதுதான் பார்வையாளர்களை மகளிர் கிரிக்கெட் பக்கம் ஈர்க்க விதிகள் கொண்டு நாம் ஆலோசிக்க வேண்டியதில்லை' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details