இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி 5 டி20, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அறிமுக வீராங்கனையாக 15 வயதேயான சஃபாலி வர்மா களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் போட்டியில் களமிறங்கிய சஃபாலி வர்மா 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.