கரோனா வைரஸ் காரணமாக பந்துவீச்சாளர்கள் பந்துகளில் உமிழ் நீரை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைத்த விவகாரத்தில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பந்துகளை பளபளக்கச் செய்வதற்காக பந்துகளில் கிரிக்கெட் வீரர்கள் உமிழ் நீர் தடவுவது வழக்கம். அவ்வாறு தடவுவதால் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு உதவி செய்யும். இதனால் பந்துகளை வைத்து இன்னும் சிறிது நேரம் ஸ்விங் செய்யலாம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ் நீரை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது பந்துவீச்சாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பந்துவீச்சாளர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் 50 ஓவர்கள் முடிந்த பின்னரே புதிய பந்தைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், ''வழக்கமாகக் கிடைக்கக்கூடிய உதவிகள் இல்லையென்றால், நம் பந்துவீச்சாளர்களின் துல்லியம் அதிகமாக இருக்கும். விக்கெட் வீழ்த்துவதற்கு மாற்று வழிகளை பந்துவீச்சாளர்கள் கண்டடைவார்கள். அதற்கு நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை காலம் எடுக்கும்'' என்றார்.
இதையும் படிங்க:புஜாராவை நிறுத்த எங்களின் அனைத்து திறமையையும் வெளிப்படுத்துவோம்: பேட் கம்மின்ஸ்...!