மினி ஐபிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டிஎன்பிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, காஞ்சிபுரம் என எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் நடப்பு சீசனில் இரண்டு மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில், மிக முக்கிய மாற்றமாக கருதப்படுவது டிஎன்பிஎல் தொடக்க சீசனில் கோப்பையை கைப்பற்றிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியும், காரைக்குடி காளைஸ் அணியும் இந்தாண்டுக்கான சீசனிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் என்ற இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.