17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில், மூன்று கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது.