பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரின் மறைவு குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்...! - எஸ்பிபியின் மறைவுக்கு சச்சின் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
sachin-tweet-for-spb
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஜியின் இசையைக் கேட்பது எப்போதும் பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகரிலிருந்து அவர் எழுதிய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பாலு இனி நீ இல்லை' - ராமோஜி ராவ் உருக்கம்!