தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'எப்போதும் எங்கள் மனதில் வாழ்வீர்கள்' - ஆசானை நினைவுகூர்ந்த சச்சின் - ராமகந்த் அச்ரேக்கர்

மும்பை: சச்சினின் சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேகரை, அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் சச்சின் நினைவுகூர்ந்துள்ளார்.

sachin-tributes-his-childhood-coach-ramakant-achrekar
sachin-tributes-his-childhood-coach-ramakant-achrekar

By

Published : Jan 3, 2020, 8:42 AM IST

Updated : Jan 3, 2020, 9:26 AM IST

சிறுவயதில் சச்சினுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்தவர் ரமாகந்த் அச்ரேகர். ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் சச்சின் டெண்டுல்கர் இவரிடம் வாழ்த்துபெறுவார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து சிறுவயது ஆசிரியரின் இறுதி ஊர்வலத்தில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.

நேற்று அவரின் முதலாமாண்டு நினைவு தினமாகும். இதனையொட்டி சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தோடு, ”எப்போதும் எங்கள் மனங்களில் வாழ்வீர்கள் அச்ரேகர் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

தனது ஆசிரியர் குறித்து சச்சின் ஒருமுறை பேசுகையில், "எனக்கு சிறுவயதில் சரியான கிரிக்கெட் அடித்தளம் அமைத்தது அச்ரேகர் சார்தான். என்னைப் போன்று பல மாணவர்கள் அவரிடம் A,B,C,D கற்றுள்ளோம். எனது வாழ்க்கையில் இவருடைய பங்கினை சொல்ல வார்த்தைகளே இல்லை. நான் இன்று இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு அவர் கொடுத்த பயிற்சிதான் முக்கிய காரணம்" என்றார். சச்சினின் இந்த ட்வீட் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Teachersday: 'அவர் வழியில்தான் இன்றும் நடக்கிறேன்' - ஆசானை நினைவு கூர்ந்து உருகிய சச்சின்!

Last Updated : Jan 3, 2020, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details