இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் இன்று தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதுவரை ஒன்பது முதல்தர போட்டிகளில் ராய்ஜி ஆடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து, கிரிக்கெட் தொடர்பான புத்தகங்களை எழுதியுள்ளார். இன்று 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதால், நாட்டின் மூத்த கிரிக்கெட்டர் என்ற புகழப்பட்டுவருகிறார்.
இவரை இன்று அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் சந்தித்தனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், ''இந்தச் சதம் கொஞ்சம் சிறப்புவாய்ந்தது. 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ரீ வசந்த் ராய்ஜிக்கு எனது வாழ்த்துகள். நானும், ஸ்டீவ் வாக்கும் அருமையான நேரங்களை செலவிட்டோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.