தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாம் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - பாகிஸ்தான்

ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 193 ரன்கள் அடித்தும், தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஹார் ஜமான், FAHAR JAMAN
rsa-vs-pak-2nd-odi-result

By

Published : Apr 5, 2021, 6:06 AM IST

Updated : Apr 5, 2021, 11:28 AM IST

மூன்று போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் (ஏப்.2) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இத்தொடரின் இரண்டாம் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று (ஏப்.4) நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டெம்பா பவுமா 92 ரன்களும், குயின்டன் டி காக் 80 ரன்களும் குவித்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டு எடுத்தார்.

342 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக அமைந்தது. இமாம் 5 ரன்களிலும், கடந்த போட்டியில் சதம் அடித்த அதிரடி வீரர் பாபர் அசாம் இப்போட்டியில் 31 ரன்களிலும், ரிஸ்வான் ரன் எடுக்காம்லும், அசிஷ் 9 ரன்களிலும், ஷதாப் கான் 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் பஹார் ஜமான் மட்டும் போராடிக்கொண்டிருந்தார். ஆசிப் அலி 19 ரன்களிலும், பாஹிம் அஷ்ரப் 11 ரன்களிலும் நடையைக்கட்ட, ஜமான் 107 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.

சதத்தைக் கடந்த பின் ஜமான், தனது முழு வெறித்தனத்தைக் காட்ட ஆரம்பித்து 128 பந்துகளில் 150 ரன்களைக் கடந்து மிரட்டினார். ஆட்டம் கை மீறி செல்வதாக உணர்ந்த தென்னாப்பிரிக்கா, ஜமான் விக்கெட்டை எடுக்க ராபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை உபயோகித்துப் பார்த்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது, ஷாகின் அப்ரிடி 5 ரன்களில் வெளியேற, இறுதி 5 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜமான் மீது நெருக்கடி அதிகமாகியது.

நிலைத்து நின்று ஆடிய ஜமானுக்கு, கடைசி ஒவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. துர்திஷ்டவசமாக ஒவரின் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். அவர் 193 ரன்களில் பரிதாபகரமாக வெளியேறினார்.

இதனால் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பில் 324 ரன்களே எடுத்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை செய்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

Last Updated : Apr 5, 2021, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details