தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இத சரியா செஞ்சா இந்தியாவ ஈசியா தோக்கடிச்சிடலாம்' - இந்தியாவை வீழ்த்துவது குறித்து ராஸ் டெய்லர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல நியூசிலாந்து அணி என்ன செய்ய வேண்டும் என்பதை ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

Ross Taylor reveals how New Zealand can beat India
Ross Taylor reveals how New Zealand can beat India

By

Published : Feb 20, 2020, 7:32 AM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒறுநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்கவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணி பின்தங்கியிருப்பதால் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறுகையில்,

"இந்திய அணி உலகின் சிறந்த அணி, அவர்கள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலையில் இருப்பது எங்களுக்கு தெரியும். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற நீங்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராஸ் டெய்லர்

இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெறவுள்ளார். 35 வயதான ராஸ் டெய்லர் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 33 அரைசதங்கள் உட்பட 7 ஆயிரத்து 174 ரன்களை குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த நியூசிலாந்து வீரர்களின் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மூன்று வருடங்களுக்குப் பின் ஓய்வு குறித்து பேசலாம் - கோலி

ABOUT THE AUTHOR

...view details