கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே திண்டாடி வரும் நிலையில், இயற்கையை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. கரோனா வைரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் காற்று மாசு சதவிகிதம் மிகவும் குறைவாகவும், மனிதர்களுக்கு சுவாசிக்க உகந்ததாகவும் மாறியிருந்தது. இதனால் மக்களிடையே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தற்போது எழுந்துள்ளன.
உலக கடல் தினம்... வைரலாகும் ரோஹித் ஷர்மா பதிவு...! - ரோஹித் ஷர்மா
உலக கடல் தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ள ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
rohit-sharmas-important-message-for-fans-on-world-oceans-day
இந்நிலையில் இன்று உலக கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், ''அனைவருக்கும் உலக கடல் தின வாழ்த்துகள். நமது கடலையும், வாழ்க்கையையும் தண்ணீருக்கு அடியில் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்போம்'' என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ரோஹித் ஷர்மா ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.