தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்டெய்ன், லீ ஆகியோரால் கஷ்டப்பட்ட ரோஹித் ஷர்மா...! - கரோனா வைரஸ்

டெல்லி: எனது ஆரம்ப காலங்களில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ ஆகியோரை எதிர்கொள்வது கடினமாக இருந்தது என இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

rohit-sharma-names-two-bowlers-who-troubled-him-initially-in-his-career
rohit-sharma-names-two-bowlers-who-troubled-him-initially-in-his-career

By

Published : May 3, 2020, 2:31 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் வீட்டில் ஓய்வில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினர்.

அப்போது ரோஹித் ஷர்மாவிடம் பிடித்த பந்துவீச்சாளர்களைப் பற்றி கூறுமாறு ஷமி கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஹித், ''அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் ஆடிய முத்தரப்பு தொடரில்தான் நான் அறிமுகமானேன். அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் டேல் ஸ்டெய்னை எதிர்கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அதுவரை ஆடிய பந்துகளிலிருந்து மிகவும் வேகமாக ஸ்டெய்ன் வீசினார்.

அதேபோல் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ மிகவும் வேகமாக வீசுவார். அவரை எதிர்கொள்வதற்கு அதிகமாக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது அவர்களின் பந்துவீச்சை ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.

தற்போதைய பந்துவீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவும், ஆஸ்திரேலியாவின் ஹெசல்வுட்டும் என்னை பிரமிக்கச் செய்கின்றனர்'' என்றார். சில நாள்களுக்கு முன்னதாக கொடுத்த நேர்காணலில் பயிற்சியின்போது யார் பந்துகளை எதிர்கொள்ள கடினமாக இருக்கும் என ரோஹித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஷமியின் பெயரைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புல் ஷாட் புலி... மும்பையின் பாட்ஷா... 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா...!

ABOUT THE AUTHOR

...view details