மாடர்ன் டே கிரிக்கெட் உலகில் ரோஹித் சர்மாதான் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என வாசிம் ஜாஃபர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். உலகக்கோப்பைத் தோல்விக்கு பின், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான காரணம் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அவரின் செயல்பாடுகள்தான்.
கேப்டன் என்பவர் ரன்கள் குவிப்பதோடு, அணியை வழிநடத்துவதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதனை ரோஹித் ஷர்மா சிறப்பாக செய்கிறார். இதனாலேயே ரோஹித் ஷர்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டர்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா ரோல் மாடல் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். இதனைக் கூறியது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம் சென்சேஷன் ஹைதர் அலி.
19 வயதே ஆகும் இவர், சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஒன்பது போட்டிகளில் களமிறங்கி 239 ரன்களக் குவித்து பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.