தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரிஸ்வான், அஷ்ரஃப் உதவியால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த பாகிஸ்தான்!

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.

Rizwan, Ashraf help Pakistan avoid follow on in first Test
Rizwan, Ashraf help Pakistan avoid follow on in first Test

By

Published : Dec 28, 2020, 2:14 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (டிச.26) மவுண்ட் மாங்குனியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 30 ரன்களை எடுத்திருந்தது.

அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அபித் 10 ரன்களுடனும், முகமது அபாஸ் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அபித் அலி 25 ரன்களிலும், முகமது அபாஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். மேலும் ஃபாலோ ஆனையும் தவிர்த்தனர். அதன்பின் 71 ரன்களில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபஹீம் அஷ்ரஃபும் 91 ரன்களில் வெளியேறினார்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவு செய்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் : திணறும் ஆஸ்திரேலியா, வெற்றியை நோக்கி இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details