கோவிட்-19 பெருந்தொற்றால் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும், இன்ஸ்டாகிராம் நேரலை மூலம் உரையாடினர். அதில் அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பற்றி பேசும்படி ரோஹித்திடன் கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய ரோஹித், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டியங் மற்றொரு கிரகத்தை செர்ந்தவர் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒருவரின் திறமையை எவ்வாறு வெளிக்கொண்டு வரவேண்டும் என அவருக்கு தெரியும். மேலும் அவர் இரு முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர், அதனால் அவருக்கு சாம்பியன்ஷிப்பை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பது தெரியும்.
ரோஹித் சர்மா - ரிக்கி பாண்டிங் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதன் காரணமாக 2013ஆம் ஆண்டு மும்பை அணியை ஹர்பஜன் சிங் வழிநடத்துவார் என நாங்கள் எண்ணினோம். ஆனால் மாறாக 2013ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை மும்பை அணி ஏலத்தில் வாங்கி, அவரை கேப்டனாகவும் நியமித்தது.
ஆனால் அவர் அத்தொடரில் சிறப்பாக விளையாட முடியாததால், என்னை அழைத்து கேப்டன் பதவியை வழங்கினார். ரிக்கி பாண்டிங் அத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். மேலும் அவர் அத்தொடர் முழுவதுமாக எனக்கு உறுதுணையாக நின்று உதவி செய்தார் என்று தெரிவித்தார்.
சச்சின் - பாண்டிங் - ரோஹித் ஐபிஎல் தொடரில் நான்கு முறை கோப்பையை கைப்பற்றி அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மேலும் மும்பை அணி ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பில்தான் அனைத்து கோப்பைகளையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘நானும் அவரும் ஒன்றல்ல’ - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆசாம்!