தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இனி செல்லப் பிராணிகளுடன் ஆர்சிபி போட்டிகளைக் காணலாம்!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் செல்லப் பிராணிகளுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டாக்அவுட் (Dogout)

By

Published : Mar 18, 2019, 5:54 PM IST

ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தங்களது செல்லப்பிராணிகளுடன் போட்டியை ரசிக்கும்படி 'டாக்அவுட்' (Dogout) இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்லப்பிராணிகள் என்றும் குடும்ப நபராகவேப் பார்க்கப்படும். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் ஆர்சிபி ரசிகர்ளுக்காகவே இந்த 'டாக்அவுட்' இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்கிறோம், என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், ஆர்சிபி அணியின் பங்குதாரர்களாக பெட்ஸ் கேர் நிபுணர்களான ஆஷிதா மேத்யூ, ராஷி நராங் ஆகியோர் இணைந்துள்ளதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

ABOUT THE AUTHOR

...view details