இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதே போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய தமிழ்நாட்டின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் 792 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை:
- கம்மின்ஸ்-ஆஸ்திரேலியா-908 புள்ளிகள்
- காகிசோ ரபாடா- தென் ஆப்பிரிக்கா-835 புள்ளிகள்
- ஜஸ்பிரித் பும்ரா- இந்தியா-818 புள்ளிகள்