ரசிகர்களால் ’சின்ன தல’ என்றழைக்கப்படும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், நான்கு முதல் ஆறு வாரங்களில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இணையத்தை தெறிக்கவிட்ட ’சின்ன தல’..! - icc
இந்திய அணியின் வீரரும் சென்னை அணியின் செல்லப் பிள்ளையுமான சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப உடல்நிலையில் மீள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சின்ன தல, தனது ட்விட்டர் பக்கத்தில் பயிற்சி எடுக்கும் ஒரு காணொலியை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், இது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் இதில் தான் எனக்கு ஆர்வம் உள்ளது. இது மனதளவிலும், உடல் அளவிலும் என்னை வலிமைப்படுத்த உதவும். விட்டு விலகுவது எளிமையான ஒன்று, ஆனால் அதனோடு போராடுவது என்பது மிக முக்கியமான ஒன்று’ எனப் பதிவிட்டுள்ளார்.