தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் டிராவிட்! - NCA

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , இந்திய ’ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் டிராவிட்

By

Published : Jul 9, 2019, 12:25 PM IST

2012ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த டிராவிட், 2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா ’ஏ’ மற்றும் இந்தியா ’அண்டர் 19’ அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

இவர் தற்போது இந்திய தேசிய கிரிகெட் அகாடமியின் தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ-யின் அதிகாரி கூறுகையில், ”ராகுல் டிராவிட் இந்தப் பதவியின் மூலம் இந்திய தேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணியின் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை தருபவராக செயல்படுவார். இதில் இந்தியா ’ஏ’, இந்தியா ’அண்டர் 19’ மற்றும் இந்தியா ’அண்டர் 23’ ஆகிய அணிகளின் வீரர்களுக்கு முக்கிய பயிற்சி அளித்தல், ஆட்டத் திறன் மேம்படுவதற்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற பணிகளை அவர் மேற்கொள்வார்” எனக் கூறினார்.

இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட இந்தியா ’அண்டர் 19’ அணி 2018ஆம் ஆண்டிற்கான ஜூனியர் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details