அதில், ‘நகரின் புதிய அப்பாவாகியுள்ள ரஹானேவுக்கு வாழ்த்துகள். அவரது குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். வாழ்கையின் வேடிக்கையான பகுதி தற்போது அவருக்கு தொடங்கியுள்ளது #fatherhood’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைக்கு அப்பாவானார் துணை கேப்டன் ரஹானே! வேடிக்கை ஆரம்பம் என ஹர்பஜன் ட்வீட் - இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழந்தைகள்
ஹர்பஜன், தோனி, ரோஹித், ரெய்னா ஆகியோரது வரிசையில் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் இந்திய துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே.
இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே
தனது இளமை பருவ தோழியான ராதிகா தோபவ்கரை கடந்த 2014இல் திருமணம் செய்துகொண்டார் ரஹானே. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பாமானதாக தெரிவித்த அவர், சில கர்ப்ப கால புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
இதனையடுத்து ரஹானே மனைவி ராதிகா தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் வீரர்களான ஹர்பஜன், தோனி, ரோஹித், ரெய்னா உள்ளிட்டோர் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள நிலையில், ரஹானேவும் இந்த கிளப்பில் இணைந்துள்ளார்.