தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ட்வீட்டரில் ராஹானேவை தரமா வெச்சி செய்த நெட்டிசன்கள்! - ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்வீட்டரில் வெளியிட்ட இந்திய வீரர் ராஹானேவை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

ரஹானே

By

Published : Mar 19, 2019, 4:32 PM IST

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், தொடரில் விளையாடுவதற்காக அணிகளும் தீவர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் இந்திய வீரருமான ராஹானே, தான் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்வீட்டரில் வெளியிட்டார். அதில், 'நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன்' என, யூகிக்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, 'நகரும் உள்ளூர் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்கிறீர்கள்' என, ரசிகர் ஒருவர் பதில் அளித்தார். இதுபோன்ற பல கிண்டலான பதிலை நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக ராஹானே தனது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்துவதில் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறார். அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் கேப்டனான இவர் 11, 4, 31, 1, மற்றும் 0 ஆகிய சொற்ப ரன்களில் வெளியேறினார்.

நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், ராஹானே சிறப்பாக விளையாடுவார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. மார்ச் 26ஆம் தேதி ஜெய்ப்பூரில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details