தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கடந்த ஜனவரி மாதம் அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக்கை நியமனம் செய்தது. இந்நிலையில் டி காக், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்குப் பதிலளித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் கிரேம் ஸ்மித், 'குயிண்டன் டி காக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரை மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிப்பது சரியான முடிவாக அமையாது. ஏனெனில், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்படுவது மிகவும் கடினமான சூழ்நிலையாகும். பல நாடுகள் தங்களது மூன்று வடிவிலான அணிகளுக்கு ஒரே கேப்டனை நியமித்துள்ளதை நாங்கள் கண்டுள்ளோம். இருப்பினும், எங்களைப் பொறுத்தவரையில், அது சரியான முடிவு கிடையாது.