சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் புஜாரா, வழக்கமான தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 176 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலரும் புஜாராவின் இந்த ஆட்டத்திற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ஷாட்களை ஆடுவதற்கு புஜாரா அச்சப்படுவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.