தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? இந்தியா vs இங்கிலாந்து - இஷான் கிஷான்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Preparations for T20 WC starts as India take on No.1 ranked England
Preparations for T20 WC starts as India take on No.1 ranked England

By

Published : Mar 12, 2021, 3:51 PM IST

அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அதிரடி வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் என பலர் இடம்பெற்றிருப்பது அணிக்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. அதேசமயம், ஐபிஎல் தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் திவேத்தியா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரீத் பும்ரா அணியிலிருந்து விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்தாலும், காயத்திலிருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பியிருப்பது பெரும் சாதகமாகவே அமைந்துள்ளது. மேலும், நடராஜன், தீபக் சஹார், நவ்தீப் சைனி என வேகப்பந்துவீச்சாளர்களுடன், ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் இடம்பிடித்திருப்பது அணிக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

புள்ளிவிவரத் தகவல்

இங்கிலாந்து அணி

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தற்போதைய ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என சகட்டுமேனிக்கு அதிரடி வீரர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளது. பந்துவீச்சாளர்களில் சாம் கரன், டாம் கரன், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர் என டி20 ஸ்பெஷலிஸ்டுகளையும் கொண்டுள்ளதால், அவ்வளவு எளிதில் இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்து விடாது என்பது ரசிகர்களின் கருத்து.

முன்னதாக, கரோனா ஊரடங்கிற்கு பிறகு அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா என இங்கிலாந்து அணி விளையாடிய அனைத்து டி20 தொடர்களையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதவிருப்பதால், இன்றையப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மைதானம்

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து டி20 போட்டிகளுமே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஒரு விதத்தில் அணிகளுக்கும் சாதகமாக இருப்பினும், கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் இரு அணிக்கும் சற்று தலைவலியை ஏற்படுத்தியது.

ஏனெனில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதிலும், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாள்களிலேயே முடிந்தது மைதானத்தின் தன்மை குறித்த பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இன்று முதலாவது டி20 போட்டி நடைபெறவுள்ளதால் இப்போட்டியில் மைதானத்தின் பங்களிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், இஷான் கிஷான், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்.

இங்கிலாந்து அணி: ஈயான் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கரன், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், சாம் பில்லிங்ஸ், டாப்லே, மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன்.

இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ரிஷப், அஸ்வின்!

ABOUT THE AUTHOR

...view details