தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உள்ளூர் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கங்குலி! - பிசிசிஐ தலைவர்

கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

Planning to start domestic cricket from January 1: Ganguly
Planning to start domestic cricket from January 1: Ganguly

By

Published : Oct 18, 2020, 12:15 PM IST

கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் நடைபெற ஒருந்த ஐபிஎல் தொடரும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் வைரஸின் தாக்கும் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூர் தொடர்களை 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நடத்தவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், “உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் குறித்து நாங்கள் விரிவான அலோசனைகளை மேற்கொண்டோம். இந்த ஆலோசனையின் முடிவில் ஜனவரி 1ஆம் தேதி முதில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்துவதாக தற்காலிக முடிவையும் எடுத்துள்ளொம். அதிலும் முக்கியமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முதலில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஸ்மித் அதிரடியால் தப்பித்த ராஜஸ்தான்; பெங்களூருக்கு 178 ரன்கள் இலக்கு!

ABOUT THE AUTHOR

...view details