தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஓய்வுக்கு முன் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் - ஐசிசி அபராதம்! - ஒரு மதிப்பிழப்பு புள்ளி

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெர்னான் பிலாண்டர், தனது இறுதி டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேனை தவறாக விமர்சித்ததன் விளைவாக அபராதம் விதித்து ஐசிசி உத்தவிட்டுள்ளது.

Philander fined
Philander fined

By

Published : Jan 27, 2020, 12:17 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் வெர்னான் பிலாண்டர், இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய பின், அவரை ஆபாசமாக விமர்ச்சித்துள்ளார். இதனையடுத்து களநடுவர்களான, ஜோயல் வில்சன், புரூஸ் இவரது செயலை ஐசிசியிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதிகளின்படி, பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை வசைபாடுவதோ, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ தவறு என்பதால், பிலாண்டருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமும், ஒரு மதிப்பிழப்பு புள்ளியையும் வழங்கி உத்திரவிட்டுள்ளது.

மேலும் பிலாண்டர் கடந்த 24 மாதங்களில் பெறும் முதல் மதிப்பிழப்பு புள்ளியாகவும் இது அமைந்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்த பிலாண்டர், தனது கடைசி போட்டியில் ஐசிசியின் அபராதத்திற்கு உள்ளானது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இதே டெஸ்ட் போட்டியின் போது ரசிகரை ஆபாசமாகப் பேசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு, போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமும், ஒரு மதிபிழப்பு புள்ளியையும் வழங்கி ஐசிசி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போலீஸ் VS பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details