இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மார்ச் 20ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 14ஆவது ஓவரை எதிர்கொண்டபோது, 52 ரன்கள் எடுத்திருந்த ஜாஸ் பட்லர், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த பட்லர் ஒருசில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.