பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதால் அவரை பாகிஸ்தான் கிரக்கெட் வாரியம் உடனடியாக இடைநீக்கம் செய்து, எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் முன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடை உத்தரவை வழங்கியுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக, உமர் அக்மல் இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதையும் படிங்க:காணாமல் போன உலகக்கோப்பைப் பதக்கம்: கண்டுபிடித்த ஆர்ச்சர்!