தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா பீதி: பிஎஸ்எல் தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டி ஒத்திவைப்பு! - பாகிஸ்தான் சூப்பர் லீக் 2020

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவிருந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Pakistan Super League postponed due to coronavirus
Pakistan Super League postponed due to coronavirus

By

Published : Mar 17, 2020, 5:19 PM IST

2020ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர், அந்நாட்டில் முதல்முறையாக நடைபெற்றுவந்தது. உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.இருப்பினும், ஐந்தாவது சீசனான இந்த தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் ரசிகர்களின்றி நடைபெற்றன.

இந்தத் தொடரில் பங்கேற்ற சில வெளிநாட்டு வீரர்களும் லீக் சுற்று முடிந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் காரணமாக தங்களது நாட்டிற்கு திரும்பினர். இதையடுத்து, கரோனா வைரஸால் பிளே ஆஃப் சுற்று முறை, அரையிறுதி போட்டிகளாக மாற்றப்பட்டன.

அதன்படி, இன்று இரண்டு அரையிறுதிச் சுற்று ஆட்டங்களும், நாளை இறுதிப் போட்டியும் நடைபெறவிருந்த நிலையில், தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கோவிட் -19 வைரஸ் காரணமாக, இதுவரை 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மக்கள் போரை விரும்பவில்லை: சோயப் அக்தர்!

ABOUT THE AUTHOR

...view details