தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PAKvsSL: 19 வயதில் ஹாட்ரிக் விக்கெட்டுகள்: ரஷித் கானை ஓரங்கட்டிய ஹஸ்னைன்! - top sports

லாகூர்: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹஸ்னைன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

Mohammad Hasnain

By

Published : Oct 6, 2019, 7:16 PM IST

#PAKvsSL:பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார்.

அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைப் படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் இச்சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், தனது 20 ஆவது வயதில் நிகழ்த்தி காட்டியிருந்தார். தற்போது ஹஸ்னைன் தனது 19ஆவது வயதிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அது மட்டுமின்றி முகமது ஹஸ்னைன் தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் குறைந்த டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; உலகக்கோப்பை நாயகனுக்கு கிடைத்த புதிய விருது

ABOUT THE AUTHOR

...view details