தமிழ்நாடு

tamil nadu

விற்பனைக்கு விடப்பட்ட பாக். வீரரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபகர் ஜமானின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

By

Published : Sep 2, 2019, 11:27 PM IST

Published : Sep 2, 2019, 11:27 PM IST

fakhar-zaman

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான். இவர், 2017இல் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் சதம் விளாசினார். இவரது பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது. அதன்பின், இவர் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர், கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.

ஹேக் செய்யப்பட்ட ஃபகர் ஜமானின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்

அதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுவரை பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த இவர், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சொதப்பினார். இந்நிலையில், நேற்று இவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (FakharZaman719) தேவையில்லாத பலப் புகைப்படங்கள் வெளியாகின. அதில், இந்த அக்கவுண்ட் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது என்ற புகைப்படமும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து, ஃபகர் ஜமானுக்கு என்ன ஆனது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஃபகர் ஜமானின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஏராளமானோர் அவரை பின்தொடர்கின்றனர். இதனால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரது அக்கவுண்டை சரி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஃபகர் ஜமானை, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். பாகிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 1,828 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details