சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தாலும், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக, சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் படுமோசாக தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, ஒரேயோரு ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தமிம் இக்பால் 65 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன் இரண்டு, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 137 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரர் அசான் அலி டக் அவுட்டாக, பாகிஸ்தான் அணி 1.4 ஓவர்கலில் ஒரு விக்கெட்டை இழந்து ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தது.