பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் உமர் குல். பாகிஸ்தானின் உள்ளூர் டி20 போட்டியான நேஷனல் டி20 கோப்பை தொடரில் சதர்ன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த உமர்குல், நேற்று (அக்.16) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக 2003ஆம் ஆண்டு அறிமுகமான உமர் குல், இதுவரை 47 டெஸ்ட், 137 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் விளையாடி 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.