தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக கழட்டிவிடபட்ட முக்கிய வீரர்கள்! - hafees

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 2019-20 சீசனுக்கான முக்கிய ஒப்பந்தங்களில் முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோருக்கு இடமில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிசிபி தெரிவித்துள்ளது.

pakistan cricket team

By

Published : Aug 9, 2019, 12:42 PM IST

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டு 33 வீரர்களாக இருந்த வகைப்பிரிவு ஒப்பந்தம் இந்த ஆண்டு 19 வீரர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சோயிப் மாலிக்

’ஏ’ வகைப் பிரிவில் இருந்த ஆறு வீரர்களில், பாபர் அசாம், சர்பராஸ் அகமது மற்றும் யாசிர் ஷா ஆகியோர் மட்டுமே முதல் குழுவில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். அதே நேரத்தில் அசார் அலி ’பி’ பிரிவிற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ’ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த சோயிப் மாலிக், ’பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த முஹமது ஹபீஸ் ஆகியோருக்கு எந்த ஒரு ஒப்பந்ததிலும் குறிப்பிடப்படவில்லை.

சோயிப் மாலிக்

அதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சோயிப் மாலிக் மற்றும் முஹமது ஹபீஸ் ஆகிய இருவரும் எதிர்கால பணிகளுக்கான ஒப்பந்தகளில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரிய வீரர்களின் முழு ஒப்பந்த பட்டியல்;

’ஏ’ பிரிவு வீரர்கள், பாபர் அசாம், சர்பராஸ் அகமது மற்றும் யாசிர் ஷா ஆகியோர் முதல்நிலை வீரர்களாகவும்,

’பி’ பிரிவில், ஆசாத் ஷபிக், அசார் அலி, ஹரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், முகமது அப்பாஸ், சதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரும்,

’சி’ பிரிவில், ஆபித் அலி, ஹசன் அலி, ஃபக்கர் ஜமான், இமாத் வாசிம், முகமது அமீர், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோரும் நீடிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது அணி விலகியதை அடுத்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மாலிக் அறிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details