பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, நேற்று (ஜனவரி 16) பாகிஸ்தானுக்குச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அணியைச் சேர்ந்த யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக கராச்சிக்கு இன்று சென்றடைந்தது.
மேலும் இப்போட்டியின் கள நடுவர்களாக அலீம் தார், ஜாவித் மாலிக் ஆகியோர் செயல்படுவார்கள் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் அலீம் தார், தனது சொந்த நாட்டில் முதல் முறையாக கள நடுவராக பணியாற்றவுள்ளார்.
இது குறித்து பேசிய அலீம் தார், “பாகிஸ்தான் நாட்டில் நான் கள நடுவராக பணியாற்றவுள்ளது எனது வாழ்வின் உணர்ச்சிகரமான தருணம். இதற்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள், 132 டெஸ்ட் போட்டிகள் காத்திருந்தேன். அந்த நீண்ட பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:IND vs AUS, 4th Test: நிதான ஆட்டத்தில் இந்தியா; பந்துவீச்சில் அசத்தும் ஆஸி.