நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எட்டு பேருக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் நியூசிலாந்தில் பயிற்சிபெற அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தடைவிதித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட கரோனா பரிசோதனை முடிவில், அந்த அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பயிற்சிபெற விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் அணியைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட கரோனா பரிசோதனை முடிவில், அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.