பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது. இதனிடையே இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்ததால் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
ரிச்சர்ட்சன் காயம்; உலகக்கோப்பையில் ஆடுவது கேள்விக்குறி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சனுக்கு காயம் ஏற்பட்டதால், உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர் ரிச்சர்டுசன்
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ரிச்சர்ட்சன் காயமடைந்துள்ளதால், உலகக்கோப்பையில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலம்பெற்று வந்த நிலையில், தற்போது பந்துவீச்சாளர்கள் காயமடைந்து வருவதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கவலையடைந்துள்ளது. இதனிடையே பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.
Last Updated : Mar 26, 2019, 1:55 PM IST