தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாப்பி பெர்த்டே டூ டெஸ்ட் கிரிக்கெட்! - Test Match records

சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் போட்டி (ஆஸ்திரேலியா - இங்கிலாந்து) நடைபெற்று இன்றோடு 147 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த தருணத்தில் டெஸ்ட் போட்டிகளில் படைக்கப்பட்ட முக்கியமான சாதனைகளை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

On this day in 1877, Test cricket was born
On this day in 1877, Test cricket was born

By

Published : Mar 15, 2020, 4:12 PM IST

தற்போதைய நவீன காலகட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஒருநாள் போட்டியில் சேர்க்கப்படுகின்றனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், முந்தையக் காலத்தில் இந்த நிலை தலைகீழாகத்தான் இருந்தது.

மனரீதியாக ஒரு வீரரின் ஆட்டத்திறனை சோதிக்க டெஸ்ட் போட்டிதான் உதவும். ஜாம்பவான்கள் பெரும்பாலோனார் டி20, ஒருநாள் போட்டியை விட டெஸ்ட் போட்டியே சிறந்தது எனக் கூறுவர். டி20 போட்டிகளின் வருகைக்குபிறகு டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவமும் சாராம்சமும் குறைந்துவிட்டது. இருப்பினும், ஐந்து நாட்களுக்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் சுவாரஸ்யமும், பரபரப்பும் இன்றைய டி20 போட்டிகளில் கிடைக்கிறாதா என்றால் அது சந்தேம்தான்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு:

டெஸ்ட் போட்டியை மேலும் சுவாரஸ்யபடுத்தும் விதமாக ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டுவருகிறன். மார்ச் 15 (இன்று) கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள். டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாறு தொடங்கியதும் சரித்திரம் படைக்கப்பட்டதும் இதேநாளில்தான்.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் போட்டி தொடங்கி இன்றொடு 147 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1877 மார்ச் 15 மெல்போர்னில்தான் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டி:

19 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் டெஸ்ட் வரலாறு மாறியதும் இப்போட்டியிலிருந்துதான். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்போட்டி சிறந்த போட்டிகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

2001 கொல்கத்தா டெஸ்ட்

இதையும் படிங்க:கொல்கத்தாவில் 19 ஆண்டுகளுக்குமுன் அரங்கேறிய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிசயமும் சரித்திரமும்...!

1877 முதல் இன்றுவரை இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற சில போட்டிகள்தான் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளாக மாறியுள்ளன. இந்த தருணத்தில் டெஸ்ட் போட்டிகளில் படைக்கப்பட்ட சில முக்கியமான சாதனைகளை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

டெஸ்ட் போட்டிகளும் சாதனைகளும்

  1. இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் - 2387
  2. அதிக போட்டிகளில் விளையாடிய அணிகள் - இங்கிலாந்து (1022), ஆஸ்திரேலியா (830),
  3. அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் - ஆஸ்திரேலியா (393), இங்கிலாந்து (371)
  4. அதிக போட்டிகள் நடைபெற்ற மைதானம் - லார்ட்ஸ் (139)
  5. அதிக ஸ்கோர் அடித்த அணி - இலங்கை (952 -6) vs இந்தியா, 1997
  6. குறைந்த ஸ்கோர் அடித்த அணி - நியூசிலாந்து (26 ஆல் அவுட்) vs இங்கிலாந்து, 1955
  7. அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் - சச்சின் டெண்டுல்கர் (200)
  8. அதிக ரன்கள் குவித்த வீரர் - சச்சின் டெண்டுல்கர் (15921)
  9. அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் - முரளிதரன் (800)
  10. அதிக போட்டிகளில் அம்பயராக இருந்த நபர் - அலீம் தார் (133)

இதையும் படிங்க:கங்குலி மீண்டும் அழைக்கப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானின் சிறந்த வெற்றியாக மாறியிருக்காது - சேப்பாக் டெஸ்ட் ரீவைண்ட்

ABOUT THE AUTHOR

...view details