தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

3ஆவது டி20: சாதனைப் படைக்க காத்திருக்கும் இந்தியா: தோல்வியை சரிகட்டும் முயற்சியில் நியூசி.! - இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

ஹமில்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு நியூசிலாந்திலுள்ள ஹமில்டனில் தொடங்குகிறது.

NZ vs IND, 3rd T20I: India eye maiden T20I series-win in New Zealand
NZ vs IND, 3rd T20I: India eye maiden T20I series-win in New Zealand

By

Published : Jan 29, 2020, 8:58 AM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் வாழ்வா, சாவா? ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் பலம் / பலவீனம்

இந்திய அணியைப் பொறுத்தவரையில் இளம் வீரர்களான கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால், எந்தச் சூழ்நிலையிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்கள். மேலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளில் திணறிவருகிறார். அவரும் தனது ஃபார்மிற்கு திரும்பும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கே.எல். ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர்

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் முதல் போட்டியைவிட, இரண்டாவது போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இருப்பினும் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியின் பலவீனமாகவே இருந்துவருகிறார். மேலும் இவரது ஓவர்களில் ஒரு சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ரன்களை வாரி வழங்கியும் வருவதினால் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே ரசிகர்களால் கருதப்படுகிறது.

இந்திய அணி

அதேசமயம் ரவீந்திர ஜடேஜா தனது அசத்தல் பந்துவீச்சினால் எதிரணியை திணறடித்துவருகிறார். இன்றையப் போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றிபெற்ற அணியுடனே களம் காண்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒருவேளை அணியில் மாற்றம் என்றால் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனி இன்றையப் போட்டியில் இடம்பெற அதிக வாய்புகள் உள்ளதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் பலம் / பலவீனம்

நியூசிலாந்து அணியில் கப்தில், முன்ரோ, வில்லியம்சன், டெய்லர் என தங்களது பேட்டிங்கில் அசத்திவருகின்றனர். இதில் யாரேனும் ஒருவர் இறுதிவரை களத்திலிருந்தால் இந்திய அணியின் வெற்றி கோள்விக்குறிதான். ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் 200 ரன்களைக் கடந்து நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

மார்டின் கப்தில்

பேட்டிங்கில் அசத்தலாக இருந்தாலும், பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் போல்ட், ஃபர்குசன் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காததால், நியூசிலாந்து அணி பந்துவீச்சில் தடுமாறிவருகிறது. அந்த அணியில் கிரண்ட்ஹோம், சாண்ட்னர் ஆகியோரும் தங்களது ஃபார்மில் இல்லாததால் அணியில் குழப்பங்கள் நிலவுகின்றன.

நியூசிலாந்து அணி

அதேபோல் அறிமுக பந்துவீச்சாளர்களான டிக்னர், பென்னெட் ஆகியோரும் ரன்களை வாரிவழங்குவதால், இன்றைய போட்டியில் டேரில் மிட்செல் அல்லது ஸ்காட் குகலீஜின் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானம்

இன்றையப் போட்டி தொடங்கவுள்ள ஹமில்டன் மைதானம், ஈடன் பார்க் மைதானத்துடன் ஒப்பிடுகையில் சற்று பெரியதுதான். பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான இந்த மைதானத்தில் இன்றைக்கு சிக்சர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணி விளையாடிய ஒன்பது டி20 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இதுவரை நியூசிலாந்து அணியுடன்

மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 212 ரன்களையும் நியூசிலாந்து அணியே எடுத்துள்ளது. முற்றிலும் நியூசிலாந்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் இன்று அவர்களது வெற்றிப் பயணம் தொடருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உத்தேச அணி விபரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சிவம் தூபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர்/ நவ்தீப் சைனி, பும்ரா, சாஹல், முகமது ஷமி.

இந்தியா - நியூசிலாந்து அட்டவணை

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், காலின் மன்ரோ, டிம் செஃபெர்ட், ராஸ் டெய்லர், சாண்ட்னர், சாலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, இஷ் ஷோதி, ப்ளயர் டிக்னர்/ ஸ்காட் குகலீஜின், ஹமீஷ் பென்னட்.

இதையும் படிங்க: யு-19 உலகக் கோப்பை - ஆஸியை துவம்சம் செய்த இந்தியா

ABOUT THE AUTHOR

...view details